உங்கள் உணவகத்தைப் பற்றி மில்லெனியர்கள் விரும்பும் 3 விஷயங்கள்

Table of Contents

மில்லெனியர்கள் காலத்திற்கு வருக! இங்கே சகலமும் துரிதமாகவும், நவீனமாகவும், இன்ஸ்டாகிராமில்-பகிரப்படுவதற்கு உகந்தவையாகவும் இருக்கின்றன. மில்லெனியர்கள் நமது மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். நமது உணவகத் தொழிலில் வெற்றிகரமாக நீடித்திருக்க நாம் இவர்களை அநுசரித்து செல்ல வேண்டும்.

மில்லெனியர்கள் பற்றி சில தகவல்கள்

  1. வயது 16-34
  2. எதார்தமான சிந்தனை உடையவர்கள் மற்றும் இன-கலப்பிறர்கள்.
  3. பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள்.
  4. இதுவரையில் மனிதவரலாற்றில் மிகுந்த கல்வியறிவுடையவர்கள்.

தலைமுறைகளில் மாற்றம் இருப்பது போல் அவர்களது பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் இருக்கின்றன. இவர்களைத் திருப்திப்படுத்த நாம் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. உங்களுடைய மில்லெனியல் வாடிக்கையாளரைக் கவர இதோ மூன்று வழிகள்.

1. உணவுவகைகளில் நவீனம்

Trendy foods, and of course, avocados.

மில்லெனியர்கள் பெரும்பாலும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதால் அவர்களுக்கு நவீன உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நீங்கள் இதை உங்கள் உணவகத்தொழிலுக்கு சாதகமாகிக்கொள்ள வேண்டும். ஆனாலும் சற்றே கவனத்துடன் செயல்படவும். ஏனென்றால் நவீனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்ககூடியவைகளாக இருக்ககின்றன.

2018- இன் உணவுப்பட்டியளின் அண்மைத் தொகுப்பு

  • அவகெடோஸ்
  • போக் பெளல்ஸ்
  • சீன ஹாட் ஸ்பாட்
  • ஃபரோ
  • ஸாஃப்ட் சேர்வ்

இதோ மேலே குறிப்பிட்டுள்ள சொற்களில் சில உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கவலை வேண்டாம், நாட்கள் செல்ல செல்ல கற்றுக்கொள்வீர்கள்.

2.இன்ஸ்டாகிராம் விளையாட்டு

Millenials and their love for Insta-worthy foods.

அநேகமாக நம்மில் பலருக்கும் இன்ஸ்டாகிராமைப் பற்றி தெரிந்திருக்கும். ‘இன்ஸ்டாகிராம்’ என்பது புகைப்படங்களை நண்பர்களுடனும், சமூக வலைதளங்களில் நம்மை பின்பற்றுபவர்களுடனும் பகிரப்படும் ஒரு சமூக ஊடகம். உணவுவகைகளின் புகைப்படங்கள் அதிகமாகப் பகிரப்டுபவைகளில் ஒன்று.

இப்பொழுது ஒரு உணவகத்தின் உரிமையாளராக நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் உணவகத்திற்கு ஒரு இலவச விளம்பர யுத்தி. உங்கள் உணவகத்தின் உணவு வகைகளை கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்த வேண்டும். சில யோசனைகள் இதோ:

  • தட்டுகளின் வடிவம் மற்றும் அமைப்பு
  • உணவுப்பொருளின் தோற்றம் (காட்சிப்படுத்துதல்)
  • உட்கட்ட ஒளியமைப்பு
  • மேஜையின் அலங்காரம்

அழகான புகைப்படங்களை மக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய விரும்புவார்கள். இது ஒரு பொழுதுபோக்கு. சற்று யோசித்து பாருங்கள், தங்களது உணவுப்பொருள் தங்கள் உணவகத்தின் மேஜையின் மீது வைக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுவதை. இது ஒரு கலை. நீங்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. கண்கவர் விழிப்புணர்வு

Fresh? Organic? That's Millennial material.

[restrict]

மில்லெனியர்கள் படித்தவர்கள் மற்றும் விழிப்புணர்வு நிறைந்தவர்கள். இதை நீங்கள் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அவர்கள் இயல்பாகவே சாப்பிடும் பதார்த்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள். அவர்கள் அது உண்மையாகவே ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்றும் புற வெளிப்பண்ணையிலுருந்து பெறப்பட்டதாக இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ள விரும்புவார்கள். நீங்கள் உங்களது உணவு அட்டவணையை தயார் செய்யும்பொழுது கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

  • பதப்படுத்தப்படாத
  • உள்ளுரில் வாங்கப்பட்ட
  • புல் தீவனம் கொடுப்பட்ட
  • அண்மை/புதிய தயாரிப்பு

அதிக விழிப்புணர்வு தரக்கூடிய வார்த்தைகளை உபயோகிப்பது நலம். இந்த தலைமுறை விலங்குகளின் நகைச்சுவை வீடியோக்களைப் பார்த்து வளரும் தலைமுறை. அதனால் நீங்கள் இறைச்சியை வாங்கும் பொழுது அவை துன்புறுத்தளுக்கு உட்படுத்தப்படாதவையாகவும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவையாகவும் இருக்கிறதா என்று பரிசோதிப்பது நலம். இல்லையென்றால் நீங்கள் மில்லெனியர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

மில்லெனியர்களை புரிந்தது கொள்வது சற்று கடினம்தான். ஆனால் நீங்கள் அதிகம் படிப்பதும், உங்களை மேம்படுத்திக்கொள்வதும் உங்கள் தொழிலை வளர்க்க உதவும்.

மேலெடுத்து செல்ல குறிப்பு :

எஃப்&பி எனப்படும் உணவு மற்றும் பானம் தொழில் முறையில் உணவகத்தை தவிர மேலும் பல உள்ளன. மில்லெனியர்களே இப்பொழுது இந்த துறைகளில் இறங்கிவிட்டார்கள். மேலே சொல்லப்பட்டவை ஒரு சிறிய முயற்சியே. ஆனால் ஒரு உணவகத்தைத் தக்கவைத்துக்கொள்ள போதுமானது.

The FMCG Marketer's Guide to First-party Data Collection

Share this article:

Other articles