இது மில்லெனியர்களின் உலகம். மக்கள் தொகையில் பெரும் பங்கு இவர்களுடையது. இவர்களை நீங்கள் புறக்கணிக்க முடியாது. ஹஃப்பிங்டன் போஸ்ட் சொல்வது என்னவென்றால் – ஆசிய மில்லெனியர்கள் தான் உலக நுகர்வோர் சந்தையில் செலவிடுதலில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆசியாவில் மட்டுமே அவர்கள் மக்கள் தொகையில் 410 மில்லியன்களை உள்ளடக்கியவர்கள். மற்றும் கொள்முதல் செய்யும் திறன் அதிகம் படைத்தவர்கள். இவர்களை கவர்வது எப்படி என்று தெரிய வேண்டுமா? சுயமாக நான் கற்றுக்கொண்ட 10 வழிமுறைகள் இதோ:
1.மூட்டலற்ற தொகை செலுத்துதல் (சீம்லெஸ் பேமன்ட்ஸ்)
மில்லெனியர்கள் உங்கள் கடைகளில் பொருள் வாங்கிய பின்னர் அவர்களுடைய பணப்பையை குடைந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பணப்பரிவர்த்தணைக்காக அவர்கள் கைமுறையை பயன்படுத்துவதில்லை. மாறாக ஆப்பிள் பே, பே வேவ்-வை உபயோகிப்பவர்கள். நீங்களும் இந்த முறையைப் பற்றுவதினால் அவர்களின் நேரம் மிச்சப்படும்.
தங்கள் கடைகளில் தேவையற்ற கூட்ட நெரிசல் மற்றும் நீ்ண்ட வரிசைகளைத் தவிர்க்கலாம். இம்முறை பணப்பரிவர்த்தணை சுலபமாக இருப்பதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.
2. சமூக வலைதளங்களில் தங்களது இருத்தல்
மில்லெனியர்கள் எப்பொழுதும் தங்கள் கைபேசியுடன் சஞ்சரிப்பவர்கள். அப்படியென்றால் உங்கள் கடையைப் பற்றி அதற்கு வருவதற்கு முன்பே தெரிந்து கொண்டுவிடுவார்கள். ஒருவேளை நீங்கள் சமூக வலைதளங்களில் இல்லையென்றால் உங்கள் கடையைப் பற்றி அவர்களுக்கு தெரியாமலேயே போகலாம். மேலும் உங்கள் கடைக்கு வராமலேயே நீங்கள் அளிக்கும் சலுகைகள் மற்றும் பொருட்களின் விவரங்களை அதில் தெரிந்து கொண்டு தங்கள் வருகையை முடிவு செய்வார்கள்.
அதனால் உங்கள் வணிகத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது இருத்தல் மிகவும் அவசியம்.
3. சிறுமக் கோட்பாடு (மினிமலிசம்)
சிறுமக் கோட்பாட்டைப் பின்பற்றுவதினால் உங்கள் கடையை அழகாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க முடியும். இது மில்லெனியல்களைக் கண்டிப்பாகாக் கவரும். ஏசோப்பின் கான்வென்ட் தோட்டம் பற்றித் தெரியுமா? அவ்விடத்தின் உள்கட்டமைப்பு முறை, தேவையான பொருட்களை அணுக ஏதுவாக இருப்பதோடு அழகியலிலும் சிறந்து விளங்குகிறது.
இதை நீங்களும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் உங்கள் கடையின் தேவையற்ற சாமான்களைக் களைந்து புழக்கடையில் வைக்கவும். மற்றும் உங்களது சரக்குகளை பார்த்தவுடன், எளிதாக எடுப்பதற்கு ஏதுவாக வைக்கவும்.
4. உறுப்பினர் வணிகம் [restrict]
உறுப்பினர் பெட்டி என்பது வாடிக்கையாளர் (மில்லெனியர்கள்) தங்கள் விருப்பத்திற்கேற்ப அவர்கள் விரும்பும் பொருட்களை ஒரு பெட்டியில் வைத்தல். ஒருவேளை அவர்களுக்கு அந்த பொருள் பிடிக்கவில்லை என்றால் அது திரும்பப்பெறப்படும். இப்படியாக நீங்கள் மில்லெனியர்களின் விருப்பு வெறுப்புகளின் தரவை தயார் செய்யலாம். இதனால் நேரம் சேமிக்கப்படும். இம்முறை மில்லெனியர்களுக்கு ஒரு தனிப்பட்ட ஷாப்பிங் அநுபவத்தைக் கொடுக்கும். நீங்கள் அளிக்கும் திறமையான தனிப்பட்ட சேவையை அவர்கள் விரும்புவார்கள்.
5.நம்பகச் செயல்நிரல் (லாயல்டி புரோகிராம்)
நம்பகச் செயல்நிரல் என்பது வெகுமதிகளை (ரிவார்டு) சேமிக்கவும், சமூக வலைதளங்களில் பகிரவும் வசதியுட்டும் செயலியை நிறுவுவதே ஆகும். இந்த தகவல் பரிமாற்றம், மில்லெனியர்கள் உங்கள் செயலியை அதிகம் பயன்படுத்த உதவும்.
கவனம். நம்பகச் செயலிகள் சிக்கலானவைகளாக இருக்கக்கூடாது. செயலியை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் சுலபமாகவும் ஆக்குவதே முக்கியம். இதனால் உங்களது பிரான்டின் மீது பற்று அதிகமாகி மில்லெனியர்கள் உங்கள் கடைக்கு வருவதும் அதிகமாகும்.
6.தனிப்பட்ட முறையில் அணுகுதல்
இதுவே உண்மையான வாடிக்கையாளர் சேவை. உங்களது மில்லெனியல் வாடிக்கையாளரின் (உங்கள் கடையில்) முந்தைய ஷாப்பிங் அநுபவத்தைக் கொண்டு அவர்களின் நம்பக அட்டை செயல்நிரல் மூலமாக தனிப்பட்ட முறையில் அணுக வேண்டும். இதனால் வாடிக்கையாளர் – உரிமையாளர் இடையே தொடர்பு அதிகமாகும், மேலும் கைபேசி அறிவிப்பு மற்றும் விசேஷ புரோமஷன்கள், சலுகைகள் பற்றி செய்தி மடல் அணுப்புவதன் மூலமாகவும் மில்லெனியர்களை நீங்கள் கவர்கிறீர்கள்.
7.உள்ளூரில் கொள்முதல்
உள்ளூரில் வாங்கப்படும் சரக்குகளுக்கு மில்லெனியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். என்னதான் அவர்கள் தங்களுடைய டிஜிட்டல் குமிழுக்குள் அடைப்பட்டிருந்தாலும் தங்களை சுற்றியுள்ள உலகத்தின் மீது அக்கறை உடையவர்கள். உள்ளூர் வணிகத்தை நீங்கள் ஊக்குவிப்பதின் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
8.விருப்பங்கள் ஏராளம்
மில்லெனியர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்- லக்கூடியவர்கள். நீங்கள் உங்களது உணவு அட்டவணையைத் தயார் செய்யும் பொழுது அணைத்து வகையான உணவு திட்ட முறைகளையும் உள்ளடக்கியதாகத் தயார் செய்யுங்கள். உதாரணத்திற்கு வெகன், வெஜிடேரியன், ஹலால், முட்டை சேர்க்காத, லாக்டோஸ் – ஒவ்வாமை போன்ற வார்த்தைகளை உபயோகியுங்கள். இதனால் யாரும் தவிர்க்கபட மாட்டார்கள்.
9.மனதிற்கு நெருக்கமான பொருட்களை விற்றல்
மில்லெனியர்களுக்கு மிகவும் பிடித்தது அவர்களின் கைபேசி. அடுத்த முறை உங்களது சரக்கு அல்லது சேவையை மேம்படுத்தும் பொழுது கையடக்க சார்ஜர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் தாராளமாகப் பின்பற்றலாம்.
10. சமூகத்திடம் திருப்பிக் கொடுத்தல்/ ஈகை
என்னுடைய “உள்ளூரில் கொள்முதல்” எனும் கூறு நினைவிருக்கிறதா? மில்லெனியர்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய விரும்புகிறவர்கள். நீங்கள் ஒரு இலாபமில்லா தொண்டு அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மில்லெனியர்களின் கொள்முதலில் ஒரு பங்கை அவ்வமைப்பிடம் சேர்த்து விட வேண்டும்.
உதாரணத்திற்கு காட்டன் ஆன் ஃபவுண்டேஷனில் நீங்கள் துணிகள், டிஸ்யூ பேப்பர்கள், பிரேஸ்லட்டுகளை விற்று அந்தத் தொகையை ஈகைக்குட்படுத்தலாம். கலெக்ஷன் டப்பா மூலமாகவும் சதவிகித முறையாலும் உங்கள் சேவையைத் தொடங்கலாம். இதனால் மில்லெனியர்களின் அபிமானத்தையும் பெற்று உங்கள் வணிகத்தையும் மேம்படுத்துகிறீர்கள். சமூக முன்னேற்றத்தில் உங்கள் பங்கையும் பதிவு செய்யலாம்.
மேலெடுத்துச் செல்ல குறிப்பு:
மில்லெனியர்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள். அவர்களுக்கு ஏராளமான விருப்பு வெறுப்புகள் உண்டு. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மெது மெதுவாக முன்னேறிச் செல்லவும்.
[/restrict]